நடிகர் லிவிங்ஸ்டன், வில்லன் மற்றும் ஹீரோ, காமெடியன் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் தோன்றிய லிவிங்ஸ்டன், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக மாறி மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார்.
கடந்த 1997-ம் ஆண்டு, லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர்.
லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா, சன் டிவியில் ஒளிபரப்பான “பூவே உனக்காக” சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது, அவர் “அருவி” என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜோவிதா, தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்..