Wednesday, March 26, 2025
Homeசினிமாநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா.. என்ன நடந்தது

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா.. என்ன நடந்தது


பாலிவுட் மட்டுமின்றி தமிழில் பிரபல ஹீரோயினாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து இருந்தார்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவ்வப்போது ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.

நீதிமன்றம் சென்ற ஆரத்யா


இந்நிலையில் அவர்கள் மகள் ஆராத்யா உடல்நிலை பற்றி youtubeல் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் முன்பே டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.


அந்த சேனல்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லையாம். அதனால் அந்த வீடியோக்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா.. என்ன நடந்தது | Aaradhya Case Delhi Hc Issue Notice To Google

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments