நெஞ்சிருக்கும் வரை
தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி வெளியான பல படங்கள் மக்களை அழ வைத்திருக்கிறது.
ஆனால் நெஞ்சிருக்கும் வரை படம் எல்லோரையும் வருத்தத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்றே கூறலாம். தனது காதலிக்காக தனது உயிரைக் கொடுத்து காப்பாற்றுவார், படத்தின் கிளைமேக்ஸ் அப்படி இருக்கும்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நரேன் மற்றும் பூனம் கவுர் நாயகன்-நாயகியாக நடித்தனர்.
நாயகியின் லேட்டஸ்ட்
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பூனம் கவுர்.
பின் தமிழில் உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
ஷாம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் அதன்பின் சினிமா பக்கமே வரவில்லை.
இந்த நிலையில் நடிகை பூனம் கவுரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வர நெஞ்சிருக்கும் வரை நாயகியா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.