நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர், அரசியல்வாதியாகவும் இருந்தவர், தற்போது அமெரிக்காவில் தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் நெப்போலியன். இவ்ருடைய மூத்த மகன் தனுஷூக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயாவுக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயம் ஆனது.
இவர்களுடைய திருமணம் நவம்பர் 7ந் தேதி ஜப்பானில் நடக்க உள்ளது. இதன் காரணமாக நெப்போலியன் அவருடைய குடும்பத்துடன் பயணம் செய்து ஜப்பானில் திருமண வேலைகளை கவனித்து வருகிறார்.
ஜப்பானில் திருமணம் வைக்க காரணம்
இந்நிலையில், தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் நடத்துவதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “நெப்போலியன் மகன் தனுஷ் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த திருமணம் நடத்தப்படுகிறது.
தற்போது, நெப்போலியன் மற்றும் அவரது மனைவிக்கு வயதாகி விட்டதால் இவர்களுக்கு பின் அவருடைய மகனை கவனித்து கொள்ளவும் நெப்போலியனுக்கு பல கோடி மதிப்பில் சொத்து இருப்பதாலும் அதனை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்ற காரணத்திற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளார்.
நெப்போலியன் இந்த திருமணத்தை ஜப்பானில் நடத்துவதற்கான முக்கிய காரணம் என்ன? ”குழந்தை பெற்று கொள்ள முடியாதவர்களின் திருமணத்தை அமெரிக்கா அனுமதிக்காது. ஆனால், ஜப்பானில் இந்த திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் ஜப்பானில் நடைபெற உள்ளது” என்று கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.