Thursday, January 16, 2025
Homeசினிமாபடத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்


2.0

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.0.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது.

2010ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் எந்திரன். இதனுடைய இரண்டாவது பாகமாக தான் 2.0 உருவானது.

இப்படத்தில் முதன் முதலில் ரஜினியுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கவிருந்தார்.

ஆனால், அவரால் நடிக்கமுடியாமல் போக கமல் ஹாசனை தேர்வு செய்துள்ளனர். பின் அவராலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக இறுதியாக தான் அக்ஷய் குமாரை வில்லன் ரோலில் நடிக்கவைத்துள்ளனர்.

ரஜினி எடுத்த முடிவு



இந்த நிலையில், 2.0 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ரஜினியின் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி இப்படத்திலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார். இதுவரை தயாரிப்பு நிறுவனம் செய்த செலவிற்கான தொகையை கொடுத்து விடுகிறேன் என்றும் அவரே கூறியுள்ளார்.

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் | Rajinikanth Take Decision To Leave Movie

ஆனால், இயக்குனர் ஷங்கர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து ரஜினிக்கு சிரமம் கொடுக்காமல் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments