Tuesday, January 21, 2025
Homeசினிமாபடத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா

படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா


நடிகை ராதிகா

நடிகை ராதகா, தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என ஒரு கலக்கு கலக்கியவர், இப்போது அரசியலிலும் ஈடுபட்டு இருக்கிறார், அதிலும் அவர் வெற்றி காண்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ள இவர் தயாரிப்பாளராகவும் சாதித்து வருகிறார்.

அண்மையில் இவர்களது வீட்டில் திருமண விசேஷம் நடந்தது, அதாவது நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமணம் கொண்டாட்டம் நடந்தது.


கோபத்தில் பிரபலம்

ஒரு விருது விழா மேடையில் நடிகை ராதிகா கடும் கோபமாக பேசியுள்ளார். அதில் அவர், பிரபலம் என்பதால் ஒரு சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார்கள்.

நாங்கள் நடித்த படம் பிடிக்கவில்லையா அதை பற்றி பேசுங்கள், படத்தில் எங்களது கேரக்டர் பிடிக்கலையா அது பற்றி பேசுங்கள், காரணம் நீங்கள் பணம் செலவழித்து எங்களுடைய படத்தை பார்க்கிறீர்கள், அதற்காக பேசலாம்.

படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா | Radhika Sarathkumar Anger About Negative Comments

ஆனால் எங்களது சொந்த வாழ்க்கை பற்றி பேச உங்களுக்கு யார் உரிமை தந்தது? பிரபலங்கள் என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?.

முகத்தை காட்டாமல் என்ன வேணாலும் பேசலாம், எவ்வளவு கீழ்தரமாகவும் பேசலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் பிரபலமாக இருந்தாலும் எங்களுக்கு மனசு இருக்கு ஆனாலும் இந்த மாதிரி முகத்தையே காட்டாமல் கண்ட மேணிக்கு பேசுபவர்களை பற்றி எங்களுடைய மனதில் நாங்கள் ஏற்றிக் கொள்வது கிடையாது.

வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் போல நாங்கள் சும்மா இல்லை, எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது என காட்டமாக பேசியுள்ளார். 

படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா | Radhika Sarathkumar Anger About Negative Comments



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments