Tuesday, February 18, 2025
Homeசினிமாபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. மன்னிப்பு கேட்ட பாகுபலி புகழ் பிரபாஸ்

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. மன்னிப்பு கேட்ட பாகுபலி புகழ் பிரபாஸ்


பிரபாஸ் 

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்தார்.


தொடர்ந்து வெளிவந்த பாகுபலி 2 உலகளவில் ரூ. 1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார், கல்கி 2898 AD ஆகிய படங்களில் நடித்தார்.

அதை தொடர்ந்து, தற்போது ‘தி ராஜா சாப்’ எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார்.

விபத்து

இந்நிலையில், ‘தி ராஜா சாப்’ சண்டைக் காட்சியில் நடிக்கும் போது பிரபாஸ் காலில் பலத்த காயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. மன்னிப்பு கேட்ட பாகுபலி புகழ் பிரபாஸ் | Actor Prabhas Asked Sorry To Fans

ஜப்பானில் அடுத்த மாதம் 3 ஆம் தேதி ‘கல்கி 2898 AD’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments