Sunday, December 8, 2024
Homeசினிமாபடப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்ட காயம்... அதனால் என்ன ஆனது பாருங்க

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்ட காயம்… அதனால் என்ன ஆனது பாருங்க


சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தாவிற்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அழகும், திறமையும் கொண்ட சமந்தா முண்ணனி நாயகியாக கலக்குகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டார்.

வேகமாக சென்ற அவரது திரைப்பயணத்திற்கு இடைவேளை விடும் விதமாக அவருக்கு ஏற்பட்ட கொடிய நோய் பெரிதாக தாக்கியது.

ஆனால் அதில் துவண்டு போகாமல் சமந்தா தனது நோயை எதிர்க்கொண்டு இப்போது குணமாகி உள்ளார்.

வைரல் போட்டோ

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தனது பட அறிவிப்பு, போட்டோ ஷுட் என ஏதாவது பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

அண்மையில் நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது, காலின் முட்டியில் அடிபட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். காயங்கள் இல்லாமல் தன்னால் ஆக்ஷன் ஸ்டாராக மாற முடியாதா என்றும் பதிவு செய்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள் என ஆறுதல் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்ட காயம்... அதனால் என்ன ஆனது பாருங்க | Samantha Injured In Shooting Spot



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments