அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இளம் இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
பைக் ரைடு
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா தான் இப்படத்தின் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், நடிகர் அஜித் பைக் ரைடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை முடித்த கையோடு பைக் ரைடு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ :
After finishing the shoot of #GoodBadUgly,Thala #Ajith took a short bike ride at Hyderabad 🏍️💥#VidaaMuyarchi .. #AjithKumar pic.twitter.com/SlBm0COatX
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) June 12, 2024