வேட்டையன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது.
அப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் இப்போது தமிழ் சினிமா இன்னொரு டாப் நடிகரின் படத்திற்காக வெயிட்டிங். யார் அவர், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் தான்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரூ. 160 கோடியில் தயாராகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
ப்ரீ புக்கிங்
ரஜினி படம் என்றால் சும்மாவா, அவரது பெயருக்காகவே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும்.
தற்போது வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங் செய்து வருகிறது. இதுவரை படம் ரூ. 6.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.