சிறுத்தை சிவா
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா.
இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர்.
2008ம் ஆண்டு தெலுங்கில் சௌர்யம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இதுவரை 9 படங்கள் இயக்கியுள்ளார், 10வது படமாக சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கியுள்ளார்.
வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
சிறுத்தை சிவா
படம் ரிலீஸிற்கு நெருங்கி வரும் நிலையில் படக்குழு புரொமோஷன் வேலைகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
அப்போது ஒரு பேட்டியில் சிறுத்தை சிவா, விஜய் பற்றியும் கதை கூறியது குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், நான் பலமுறை விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறேன், படம் எடுப்பதற்கு கதையையும் கூறியிருக்கிறேன்.
படம் தொடர்பாக நிறைய சந்திப்புகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன், ஆனால் சரியான காலம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.