பிக்பாஸ் ஷோ
சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல உதவியுள்ளன.
அப்படி ஒரு ஷோவாக கொண்டாடப்பட்டது தான் பிக்பாஸ். முதல் சீசனில் இருந்து வெற்றிகரமாக ஷோ ஒளிபரப்பாகி வருகிறது, அடுத்த புதிய சீசனிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 6வது சீசனில் பங்குபெற்று அந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் அசீம். ஆனால் அவர் டைட்டில் ஜெயித்தது குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன.
புதிய தொடர்
பிக்பாஸ் பிறகு படங்களில் ஒருவலம் வருவார் என பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிகிறது. ஆனால் அவர் சில இயக்குனர்களின் படங்களில் கமிட்டானார் என சில தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
தற்போது என்னவென்றால் நடிகர் அசீம் சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலை தயாரித்த நிறுவனம் தற்போது புதிய சீரியல் தயாரிக்கிறார்களாம்.
அந்த சீரியலில் ஹீரோவாக அசீம் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அசீம் இதற்கு முன் பிரியமானவள், தெய்வம் தந்த வீடு, பகர் நிலவு, நிறம் மாறாத பூக்கள், பூவே உனக்காக போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.