அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் அஜித் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஆனால், இவர் ஒரு காலகட்டத்தில் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். அப்போது பெப்சி குளிர்பான கம்பெனி விளம்பரத்தில் நடிக்க அஜித்தை கேட்டு வந்துள்ளனர்.
1 கோடியை தூக்கி எறிந்த அஜித்
இந்த பெப்சி விளம்பரத்தில் நடித்தால் ரூ. 1 கோடி சம்பளமாக தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
அன்றைய காலகட்டத்தில் அதுமிகப்பெரிய தொகை ஆகும். அப்போது அஜித் பணக்கஷ்டத்திலும் இருந்துள்ளார்.
ஆனால், பெப்சி குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் எனக்கு அந்த ரூ. 1 கோடி சம்பளமும் வேண்டாம் என அஜித் முடிவு செய்து, அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
காரணம், தான் அந்த விளம்பரத்தில் நடித்தால், தன்னுடைய ரசிகர்கள் அந்த குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள்.
அது தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடும் என்பதினால் ரசிகர்கள் மேல் அவர் வைத்திருக்கும் அன்பின் காரணமாக அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இந்த தகவலை அன்றைய காலகட்டத்தில் அஜித்துடன் இருந்த வி கே சுந்தர் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.