Wednesday, March 26, 2025
Homeசினிமாபணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வி.. சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட முக்கிய போட்டியாளர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வி.. சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட முக்கிய போட்டியாளர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்


பிக் பாஸ் 8ம் சீசன் கடைசி வாரம் என்றாலும் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 6 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது. ஆனால் இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும்.
 

அப்படி அவர்கள் வரவில்லை என்றால் எலிமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஜாக்குலின் எலிமினேஷன்

இந்த டாஸ்கில் இன்று ஜாக்குலின் பங்கேற்று இருக்கிறார். அவர் ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வருவதற்குள் நேரம் முடிந்து கதவு மூடப்பட்டுவிட்டது.

அதனால் ஜாக்குலின் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சீசனில் எல்லா வாரத்திலும் ஜாக்குலின் நாமினேட் ஆகி இருந்தார். அப்போது மக்கள் வாக்களித்து அவரை காப்பாற்றி இருந்தார்கள். ஆனால் கடைசி வாரத்தில் டாஸ்க் நடத்தி அவர் எலிமினேட் ஆகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இதை பற்றி கோபமாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வி.. சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட முக்கிய போட்டியாளர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss 8 Jacquline Eliminated By Money Box Task

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments