Sunday, December 8, 2024
Homeசினிமாபண விஷயங்கள் குறித்து மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை தான்... பழைய பேட்டியில்...

பண விஷயங்கள் குறித்து மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை தான்… பழைய பேட்டியில் நடிகர் சொன்ன விஷயம்


ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து விஷயங்கள் வந்துகொண்டிருக்கிறது.

அப்படி அண்மையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார்.

அதேசமயம் அவரது மனைவி, இந்த முடிவை அவர் மட்டுமே எடுத்துள்ளார், என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் அவரே எடுத்த முடிவு என அறிக்கை வெளியிட்டார்.

மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் அதிகம் தங்களது பிரச்சனையை வெளிப்படுத்த முக்கிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.


விக்ரம் பேச்சு

ஜெயம் ரவி தனது வீட்டில் தனக்கு மரியாதை இல்லை என்றும் ஒரு பணம் செலவு செய்ய வேண்டும் என்றாலும் மனைவியிடம் கேட்டு தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

வங்கி கணக்கு எல்லாமே Joint Account தான், எல்லா Propertyம் அவரது பெயரில் தான் உள்ளது என அவர்களுக்குள் நடந்த நிறைய விஷயங்களை ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி குறித்து கூறிய விஷயம் வைரலாகி வருகிறது. அதில் விக்ரம், நான் எப்போதும் கையில் பர்ஸ் வைத்திருக்க மாட்டேன், தேவைப்படும் போது உதவியாளரிடம் தான் கேட்பேன்.

பண விஷயங்கள் குறித்து மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை தான்... பழைய பேட்டியில் நடிகர் சொன்ன விஷயம் | Vikram About Jayam Ravi Aarthy Money Problem

நானும் ஜெயம் ரவியும் வெளிநாடுகளில் எப்போதாவது பார்ட்டிக்கு போகும்போது ஏதாவது பணம் தேவைப்பட்டது என்றால் ஜெயம் ரவியிடம், மச்சான் பைசா இருக்கா என்று கேட்பேன்.

அதற்கு அவர், என்கிட்ட இல்ல அண்ணா என்று சொல்லிவிட்டு பின் தன் மனைவியிடம் இருந்து வாங்கி கொடுப்பாரு என கூறியிருந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments