விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பெரிய படங்களாக நடித்து வரும் அவர், கடைசியாக ரத்னம் படத்தில் நடித்து இருந்தார்.
அடுத்து விஷால் மிஷ்கின் இயக்கத்தில் பாதியில் நின்ற துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க இருக்கிறார்.
விஷால் என்னை ‘பரதேசி’ என அழைக்கிறார்..
இந்நிலையில் நடிகர் விஷால் பற்றி ஒரு பேட்டியில் நடிகை ரவீனா ரவி பேசி இருக்கிறார். ‘விஷால் என்னை பரதேசி என்று தான் எப்போதும் அழைக்கிறார். அது ஏன் என கடவுள் சத்தியமாக எனக்கு தெரியவில்லை’ என கூறி இருக்கிறார்.
விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ரவீனா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்களாம்.