குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த நிகழ்ச்சி ஹிட்டாக மக்கள் பார்க்கிறார்கள், ஆனால் அவர்களை பார்க்க வைக்க அந்த ஷோ குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளனர்.
இப்படி ஹிட்டான இந்த ஷோவால் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது, அது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
வெங்கடேஷ் பட்
இந்த 5வது சீசனில் தயாரிப்பு நிறுவனம் மாற நடுவர் வெங்கடேஷ் பட், சில கோமாளிகள் என மாறியுள்ளனர்.
தற்போது மணிமேகலை-ப்ரியங்கா பிரச்சனை குறித்து 4 சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், என் குடும்பத்தில் இரண்டு பேர் சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் பார்க்கிறேன்.
இந்த பிரச்சனை தன்னால் அடங்கிப் போகும். மாகாபா ஆனந்த் சொன்ன மாதிரி 2 யானைகள் சண்டை போட்டா நாம் குறுக்கே வரக்கூடாது, அதை அவர்களே சரி செய்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.