Friday, December 6, 2024
Homeசினிமாபல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


வடிவேலு

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலரும் மறந்துவிட்டார்கள்.

நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பதும் சாதாரண விஷயம் கிடையாது, அது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு.

மற்றவர்களை கேலி செய்வது, டபுள் மீனிங் பேசி சிரிக்க வைப்பது, இதுபோன்று செய்யாமல் தன்னுடைய காமெடி காட்சிகளில் தன்னையே கலாய்த்துக்கொண்டு நடிப்பார்.

Memes கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தார், எந்த ஒரு மீம் கிரியேட் செய்யவேண்டும் என்றாலும் வடிவேலு பட காட்சிகள் முதலில் இடம்பெறும்.

அசுர வளர்ச்சியை கண்ட வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார்.

பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Comedian Vadivelu Net Worth Details


சொத்து மதிப்பு

இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுவிற்கு மக்கள் வாழ்த்து கூறி வர இன்னொரு பக்கம் அவரின் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.

மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அவர் அங்கு சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார். சென்னையில் 2 பங்களா, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.

இப்படி மொத்தமாக நடிகர் வடிவேலுவிற்கு ரூ. 150 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Comedian Vadivelu Net Worth Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments