ரன்பீர் கபூர்
ரிஷி கபூர்-நீதூ கபூர் ஆகியோரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் நடிகர் ரன்பீர் கபூர்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அனிமல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அடுத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபல நடிகையான ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ராகா என்ற மகள் உள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூர் சில மாதங்களுக்கு முன்பு புதியதாக ரூ. 8 கோடி மதிப்புள்ள பெண்ட்லி (Bentley) என்ற வகைக் கார் ஒன்றை வாங்கி இருந்தார்.
இந்த வகை கார்களை மிகுந்த செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர்.
ரன்பீர் கபூர் செய்த செயல்
அந்த அளவிற்கு மிகுந்த விலை உயர்ந்த இந்த காரில் சமீபத்தில், நடிகர் ரன்பீர் கபூர், அவருடைய மனைவி ஆலியா பட் மற்றும் அவர்கள் குழந்தையுடன் சேர்ந்து அவரது 42 – வது பிறந்தநாளை கொண்டாட ஜாலியாக மும்பையின் சாலைகளில் ஒரு சிறிய ரவுண்ட் சென்றுவந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், நடிகர் ரன்பீர் கபூர் தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.