நடிகை பத்மினி
நலம் தானா, நலம் தானா என்ற பாடலுக்கு நடனம் ஆடி இப்போதும் மக்களால் ரசிக்கப்படும் நடிகையாக இருக்கிறார் பத்மினி.
நாட்டிய பேரொளி என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிப்பு, நடனம், பரதநாட்டியம் என ரசிகர்களை தனது தனித்துவமான கலையால் கட்டிப்போட்டவர்.
கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளை முறையே பயின்றவர்.
இவரது சகோதரிகளான லலிதா மற்றும் ராகினியும் நடிகைகள் தான். இவர்கள் 3 பேரையும் திருவாங்கூர் சகோதரிகள் என்று தான் அழைப்பார்கள்.
மகனின் போட்டோ
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து வந்தவர் ராமச்சந்திரன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார், பெயர் பிரேம் ஆனந்த்.
இவர் 1986ம் ஆண்டு உதயம் பதின்ஜாரு என்ற மலையாள படத்தில் நடித்தார் அதன்பின் நடிக்கவில்லை.
பிரேம் ஆனந்த், உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்துள்ளார்.