அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் குட் பேட் அக்லி அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். பில்லா, ஆரம்பம் என இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இயக்குனர் சொன்ன மாஸ் விஷயம்
இந்த நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் அஜித்தை வைத்து பாகுபலி போல் படம் பண்ணுவதாக முடிவு செய்ததாகவும், ஆனால், அப்படம் திடீரென கைவிடப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகுபலி போன்ற கதைக்களத்தில் அஜித் நடித்திருந்தால், கண்டிப்பாக அது மிகப்பெரிய வசூல் சாதனை மட்டுமின்றி தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.