பாக்கியலட்சுமி
பெங்காலி மொழியில் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான தொடர் தான் ஸ்ரீமோயி.
இந்த தொடர் கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், ஒடியா என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் சில புதுமுக கலைஞர்கள் மற்றும் நாம் பார்த்து பழக்கப்பட்ட நடிகர்கள் ஆகியோருடன் தொடர் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கியது.
இப்போது கதையில் கோபி, இனியா பிரச்சனையை வைத்து ஒரு சண்டை போட்டார், ஆனால் அது புஸ் என ஆகிவிட்டது. அடுத்த வாரம் எப்படி கதை நகரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
முடிந்த தொடர்
பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஸ்ரீமோயி தொடர் 5 மொழிகளில் முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் மலையாளத்தில் குடும்பவிளக்கு என்ற பெயரில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடர் கடந்த ஆகஸ்ட் 3 அதாவது நேற்று முடிவுக்கு வந்துள்ளது.
இப்போது மராத்தி, ஹிந்தி மற்றும் தமிழில் தான் வெற்றிகரமாக பாக்கியலட்சுமி தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.