ராயன்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று வந்தது.
சில கலவையான விமர்சனங்கள் படத்தை சுற்றி இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள், ராயனை தங்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட துவங்கிவிட்டனர். உலகளவில் இப்படம் 7 நாட்களில் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து தனுஷின் கேரியரில் குறுகிய நாட்களில் ரூ. 100 கோடியை தோட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
அதுவும் அவருடைய 50வது திரைப்படம் என்பதால், இது இன்னும் தனுஷுக்கு ஸ்பெஷல் தான். விஜய் சேதுபதிக்கு எப்படி 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றியை கொடுத்ததோ, அதை தொடர்ந்து வெளிவந்த தனுஷின் 50வது படம் ராயனும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், ராயன் திரைப்படம் 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 134 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 70 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.