Saturday, December 7, 2024
Homeசினிமாபாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு! விவாகரத்து குறித்து ஜெயம் ரவி வெளிப்படை பேச்சு

பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு! விவாகரத்து குறித்து ஜெயம் ரவி வெளிப்படை பேச்சு


நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து ஜெயம் ரவி பேசியுள்ளார். சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த ஜெயம் ரவியிடம் விவாகரத்து இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது :

நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறுவழி இல்லை. இது எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரிதான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன.

நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று அவர்கள் சொல்வது தவறாக தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.



அவர்கள் தரப்பில் இருந்து பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது, இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு தெரியாது என்று சொல்வது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்கமுடியும்.

எனக்குபுரிய வில்லை, நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக சொல்வதும் சரி இல்லை. எனது மகன்களுடன் தான் இருந்தேன் மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.    

பாடகியுடன் இணைத்து பேசுவது தவறு


பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு, அந்த பெண்ணிற்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அந்த பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார்.



மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மீக மையம் நான் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று புரியவில்லை.

ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள், அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார்.

பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு! விவாகரத்து குறித்து ஜெயம் ரவி வெளிப்படை பேச்சு | Jayam Ravi Talked Openly About Divorce Issue

அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.

அம்மா, அப்பா என் முடிவின்படியே போகிறார்கள். நான் சுற்றுகிற நபர் இல்லை. என் பிரச்சனையில் ஒரு நாள் உண்மை வரும். அது கோர்ட்டில் வரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்.

மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன்.

நோட்டீஸ் அனுப்பும் முன் மூத்த மகனிடம் விஷயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது. மக்கள் கொடுத்தது. என் இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒருநாள் உண்மை தெரியவரும் போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என நடிகர் ஜெயம் ரவி கூறியியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments