சினேகன்
சினேகன், தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், நடிகர் மற்றும் கவிதை எழுத்தாளராக தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.
புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமானார், இதுவரைக்கும் 600 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார், 50 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
பாடல்கள் எழுதி பிரபலமானதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அதிகம் பிரபலமானார்.
புதிய தொடர்
பிக்பாஸ் பிறகு திருமணம், கட்சி வேலை செய்து வந்தது என பிஸியாக இருந்தவர் இப்போது புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் தயாராக போகும் இந்த தொடரை யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் பிரியன் இயக்க இருக்கிறாராம்.
பவித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சினேகன், அனிதா சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.