Monday, January 13, 2025
Homeசினிமாபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் ரோட்டில் நடந்த சம்பவம்.. நடிகை நிரோஷா ஓபன் டாக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் ரோட்டில் நடந்த சம்பவம்.. நடிகை நிரோஷா ஓபன் டாக்


பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் சீசனிற்கு பெரிய வெற்றி கிடைத்தது.

முதல் சீசன் முடிந்த கையோடு 2வது சீசன் தொடங்கப்பட்ட இது அப்பா-மகன்களின் பாசத்தை பற்றிய கதையாக அமைந்திருக்கிறது.

இதில் முதல் சீசனில் நடித்தவர்களும் உள்ளார்கள், அண்மையில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்துவந்த வசந்த் வசி வெளியேற அவருக்கு பதில் வெங்கட் இணைந்துள்ளார்.


நிரோஷா பேச்சு


இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசனில் பாசமுள்ள அம்மாவாக கோமதி கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.

இவர் ஒரு பேட்டியில், நான் இதுவரை எத்தனையோ சீரியல்கள் நடித்திருக்கிறேன், அதில் கிடைக்காத அனுபவம் எனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கிடைத்துள்ளது. கோமதியாக என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் ரோட்டில் நடந்த சம்பவம்.. நடிகை நிரோஷா ஓபன் டாக் | Actress Nirosha About Pandian Stores Serial

ஒருநாள் ரோட்டில் நடந்துகொண்டிருந்த போது ஒரு பெண் என்னிடம் வந்து, கோமதி இனி இப்படியே இருந்துகோமா, மருமக கிட்ட உள்ள அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடாதே.

சமையல் அறையை எந்த காரணம் கொண்டும் உன் மருமக தங்க மயிலுக்கு கொடுத்துவிடாதே என்று சொன்னார். சிரிப்பு வந்தது, என்னடா நம்ம கேரக்டரை இவ்வளவு ஆழமா ரசிக்கிறாங்க என்று தான் நினைத்தேன்.

எனது அம்மா கூட கோமதி கேரக்டர் பார்த்து நீயா இப்படியெல்லாம் நடிக்கிற என கேட்டதாக நிரோஷா பேசியிருக்கிறார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் ரோட்டில் நடந்த சம்பவம்.. நடிகை நிரோஷா ஓபன் டாக் | Actress Nirosha About Pandian Stores Serial



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments