பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைய 2வது சீசன் எப்போதோ தொடங்கப்பட்டு இப்போது ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறது. இப்போது கதையில் பாண்டியனின் மகன் குழலி வீட்டு பிரச்சனை தான் முக்கியமாக செல்கிறது.
அதோடு தங்கமயிலுக்கு பாண்டியன் வேலை பார்த்த விஷயமும் பரபரப்பாக செல்கிறது.
புதிய என்ட்ரி
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு புதிய நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் தங்கமயில் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் ரித்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளாராம்.
இன்றைய எபிசோடில் அவரது காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.