பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர்.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட கூட்டுக் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை காட்டிய இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
பின் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது, அதேவேகத்தில் அப்பா-மகன்களை வைத்து 2வது சீசன் தொடங்கப்பட்டது.
இதில் முதல் சீசனில் நடித்த பலரும் நடிக்கின்றனர், அண்மையில் முதல் சீசனில் நடித்த வெங்கட் 2ம் பாகத்தில் இணைந்துள்ளார்.
வசந்த் வசி
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வசந்த் வசி. இவர் இப்போது தொடரில் இருந்து விலகியிருப்பதாக செய்திகள் வந்த நிலையில் இதற்கு முன் வசந்த் வசி கொடுத்த பேட்டி வைரலாகிறது.
அதில் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் விலகுகிறேன் என்ற வதந்தியை நானும் கேள்விப்பட்டேன், ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை, என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.
தற்போது வசந்த் வசி நடித்துவந்த செந்தில் கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் வெங்கட் நடிக்க இருக்கிறார்.