விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அதன் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் அரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் சத்யா சாய். அவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனிலேயே ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
விலகியது ஏன்
முஸ்லீம் பெண் ரோலில் தான் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் ஜோடியாக தான் அந்த ரோல் இருக்கும் என்றும் கூறி இருக்கின்றனர். ஹிந்து பையன் – முஸ்லீம் பெண் காதல் என்பது போல கதை இருக்கும் எனவும் கூறினார்களாம்.
ஆனால் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தபிறகு அந்த ரோல் வேண்டாம் என முடித்துவிட்டார்களாம். சேனல் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அது நடந்திருக்கிறது என தற்போது சத்யா சாய் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.