வினுஷா தேவி
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதன் முதலில் ரோஷ்ணி என்பவர் கதாநாயகியாக நடித்து வந்தார்.
பின் அவர் அந்த சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் நடிக்க வந்தார். கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் வினுஷா.
புதிய சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பனிவிழும் மலர்வனம் எனும் சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் வினுஷா தேவி. மேலும் கதாநாயகனாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்திருந்த நடிகர் சித்தார்த் குமரன் நடிக்கவுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி தமிழும் சரஸ்வதியும் சீரியல் வில்லனாக நடித்த நடிகர் ரயன் மற்றும் மௌனராகம் 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ஷில்பா ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.