நடிகர் நிவின் பாலி மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களை ஒருவர். அவர் பிரேமம், நேரம் போன்ற படங்களின் மூலமாக தமிழிலும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.
தற்போது மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நிவின் பாலி பட வாய்ப்பு தருவதாக வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் புகார் கூறி இருக்கிறார்.
நிவின் பாலி விளக்கம்
இந்நிலையில் இந்த புகார் பற்றி நிவின் பாலி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
“இது முற்றிலும் உண்மை இல்லாத ஒன்று. இந்த புகார் ஆதாரமற்றவை என நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். இதற்கு காரணமானவர்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவேன். இதை சட்டப்படி சந்திக்க போகிறேன்” என நிவின் பாலி கூறி இருக்கிறார்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024