Friday, April 18, 2025
Homeசினிமாபிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் விஷாலுக்கு பரிசு கொடுத்த தர்ஷிகா.. என்ன கொடுத்தார் தெரியுமா?

பிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் விஷாலுக்கு பரிசு கொடுத்த தர்ஷிகா.. என்ன கொடுத்தார் தெரியுமா?


பிக்பாஸ் 8

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8வது சீசன் 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி, கமல்ஹாசன் ஸ்டைலை பிடிக்காமல் தனக்கு என்ன வருமோ அப்படி நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார், பாராட்டுக்களும் கிடைக்கிறது. இன்னொரு பக்கம் சில மோசமான விமர்சனமும் வருகிறது.

அடுத்தடுத்து சில வாரங்களாக பிக்பாஸில் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது. கடந்த வாரம் தர்ஷிகா மற்றும் சத்யா என இருவரும் வெளியேறினர்.


தர்ஷிகா பரிசு

பிக்பாஸ் வரலாற்றில் எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இணைந்துவிடுவார்கள்.

அப்படி இந்த சீசனில் விஷால் மற்றும் தர்ஷிகா ஜோடி என பேச்சு அடிபட்டது. தர்ஷிகா, இந்த காதல் கிசுகிசுவில் இணைந்ததில் இருந்து அவரது ஆட்டம் சரியாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துவர கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் தர்ஷிகா தனது அம்மாவின் மோதிரத்தை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் விஷாலுக்கு பரிசு கொடுத்த தர்ஷிகா.. என்ன கொடுத்தார் தெரியுமா? | Tharshika Gift To Vj Vishal Before Eviction

மோதிரத்தை வாங்கிய விஷால், அம்மாவின் நினைவாக அவர் வைத்திருந்த மோதிரத்தை என்னிடம் தந்துவிட்டாள், இதுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று விஷாலும் நிகழ்ச்சியில் புலம்பியிருந்தார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments