Sunday, February 9, 2025
Homeசினிமாபிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?... புகைப்படம் இதோ

பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?… புகைப்படம் இதோ


நட்சத்திர ஜோடி

உமா ரியாஸ்-ரியாஸ் கான், தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் இவர்களும் முக்கியமானவர்கள்.

இந்த ஜோடி வெள்ளித்திரை-சின்னத்திரை என இரண்டிலுமே கலக்கியுள்ளார்கள். இவர்களது மூத்த மகன் ஷாரிக் சினிமாவில் அறிமுகமாகி சில படங்கள் நடித்தார், ஆனால் அவ்வளவாக ரீச் கிடைக்கவில்லை.

பின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் நன்றாக விளையாடி பிரபலமும் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் ஷாரிக் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் நடக்கவில்லை.


திருமணம்


பட அறிவிப்பு வருமா என எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அவரின் திருமண செய்தி வந்தது. மரியா ஜெனிபர் என்பவரை காதலித்த ஷாரிக் சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டார்.

அண்மையில் ஷாரிக் மற்றும் அவரது மனைவி மரியா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில் மரியா பேசும்போது, நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்து வந்தேன். என் மகள் தான் எனக்கு முக்கியமாக தெரிந்தால், அதனால்தான் நான் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.

வருபவர் என் மகளை ஏற்றுக் கொள்ளலாம், என் மகள் அவரை அப்பாவாக ஏற்றுக் கொள்வாரா என்கிற பயம் இருந்தது, ஆனால் ஷாரிக் என் மகளை நன்றாக பார்த்துக் கொண்டார்.

அதைப் பார்த்து தான் எனக்கு அவர் மீது காதலே வந்தது, ஷாரிக் ஒரு நல்ல கணவராக இருப்பதை விட ஒரு நல்ல அப்பாவாக இருக்கிறார் என கூறியுள்ளார். 

பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?... புகைப்படம் இதோ | Ex Bigg Boss Contestant Shariq Marriage Life

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments