பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.
விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். 7வது சீசன் முடிந்த கையோடு அடுத்த சீசனிற்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
வழக்கம் போல் இந்த 7வது சீசனை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று பார்த்தால் அவர் விலக அவருக்கு பதில் இப்போது பிக்பாஸ் 8வது சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார்.
அவர் இடம்பெறும் முதல் புரொமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
போட்டியாளர்
இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் நிறைய லிஸ்ட் வலம் வருகிறது. அதில் சீரியல் நடிகர் அருண், குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா, சீரியல் நடிகர் தீபக் என பலரது பெயர்கள் அடிபடுகிறது.
அதோடு பாக்கியலட்சுமி சீரியல் புகழ் அக்ஷிதா பெயர் சமீப நாட்களாக கூறப்பட தற்போது இந்த லிஸ்டில் இன்னொரு நடிகையும் இடம்பெறுகிறார்.
அதாவது விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களான ஈரமான ரோஜாவே மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர்களில் நாயகியாக நடித்த பவித்ரா பிக்பாஸ் 8ல் கலந்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வலம் வருகிறது.
ஆனால் உண்மையில் 8வது சீசனில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.