பிக்பாஸ் 8
பிரம்மாண்டத்தின் உச்சமாக தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் 8.
கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அதிரடி களமாக இருக்கும் என்பது தெரிகிறது. முதல் வாரம் எல்லா சீசனிலுமே நோ எலிமினேஷன், ஆனால் இந்த முறை அப்படி இல்லை.
நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த நாளே சச்சனாவை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார் பிக்பாஸ். அதோடு இந்த வார நாமினேஷனில் 6 போட்டியாளர்கள் உள்ளனர், அவர்களில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ஜாக்குலின்
இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டுள்ளவர்களில் விஜய் டிவி புகழ் ஜாக்குலினும் ஒருவர். ரக்ஷனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஒரு தொடரிலும் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தொகுப்பாளினி ஜாக்குலின் சொத்து மதிப்பு என்ற விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் காணாமல் போன ஜாக்குலின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரையில் இருக்கிறது என கூறப்படுகிறது.