ரவீனா தாஹா
தனது 4 வயதிலேயே ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா.
பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்து மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றார். ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்திய இவர் மேலும் சில முக்கிய படங்களிலும் நடித்துள்ளார்.
சீரியல்களை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளன இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக விளையாடினார்.
புதிய தொடர்
இந்த நிலையில் நடிகை ரவீனா கமிட்டாகியுள்ள புதிய தொடர் குறித்த தகவல வந்துளளது. அதாவது ஆஹா தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் Vera Maari Office 2வது சீசனில் முக்கிய நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.