செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் தற்போது பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். சன் டிவியின் செவ்வந்தி சீரியல் ஹீரோயின் திவ்யா ஸ்ரீதரை நடிகர் அர்னவ் திருமணம் செய்தார்.
திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், அர்னவ் அவரை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார் என சர்ச்சை எழுந்தது.
தற்போது பிக் பாஸ் போட்டியாளராக இருக்கும் அன்ஷிதா தான் அந்த பெண் என திவ்யா ஸ்ரீதர் அப்போது பரபரப்பு புகார் கூறினார். அர்னாவ் கர்ப்பமாக இருந்த தன்னை தாக்கிய நிலையில் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாகவும் அவர் அப்போது வீடியோ வெளியிட்டு இருந்தார்.
திவ்யாவுக்கு அதன் பிறகு பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளை பார்க்க கூட அர்னவ் வரவில்லை என கூறப்படுகிறது.
திவ்யாவின் லேட்டஸ்ட் பதிவு
அர்னவ் – அன்ஷிதா ஜோடி தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் திவ்யா ஸ்ரீதர் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் அர்னவ் செய்யும் விஷயங்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நேற்று அவர் அழுததை டிராமா என நெட்டிசன்கள் விளாசினார்கள்.
அதை பற்றி தான் திவ்யா ஸ்ரீதர் மறைமுகமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். “All good things must come to an end” என அவர் குறிப்பிட்டு டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.