விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என பல விஷயங்கள் ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும்.
இதுவரை 7 சீசன்கள் தமிழில் நிறைவடைந்து இருக்கிறது. அடுத்து 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசன் விலகிவிட்ட நிலையில், 8ம் சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். அதன் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.
தொடங்கும் தேதி
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8 தொடங்கும் தேதி பற்றிய ஒரு விவரம் வெளியாகி இருக்கிறது.
அடுத்த மாதம், அக்டோபர் 13ம் தேதி பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.