பிக் பாஸ் சௌந்தர்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் சௌந்தர்யா. பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இதுவரை நடந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். நேற்றைய எபிசோடில் ரஞ்சித், சௌந்தர்யா, ஆனந்தி ஆகியோர் தங்களது வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்துகொண்டனர்.
மோசடி செய்த கும்பல்
இதில் பேசிய சௌந்தர்யா முதலில் தனது குரலுக்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக கூறினார். பின் சினிமாவில் தனக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகள் குறித்து பேசியிருந்தார்.
பின் மிகவும் எமோஷனலான சௌந்தர்யா 17 லட்சத்தை இழந்தது குறித்து பேசினார்.
“நான் 8 வருடங்களாக சினிமாவில் நடித்து சம்பாதித்த 17 லட்சம் ரூபாய்யை ஒரே ஒரு போன் கால் மூலம் மோசடி செய்து என்னிடம் இருந்து திருடப்பட்டது. எனக்கு எங்க அப்பா மாதிரி ஆகணும் என்று தான் ஆசை. அவரை போலவே நானும் ஒரு வீடு கட்டவேண்டும் என கனவு வைத்திருந்தேன். அதற்காக நான் 8 வருடமாக உழைத்து வைத்திருந்த 17 லட்சத்தை போன் கால் மூலமாக மோசடி செய்துவிட்டனர். ஒரே ஒரு போன் நாள் மொத்த பணமும் காலி. இந்த சம்பவம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒரு மாத்திற்கு முன் தான் நடந்தது. அதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.” என கூறியுள்ளார்.
Kadanthu Vantha Paadhai💥#Soundariya 🥺
School la irunthey enoda voice vachu ellam enna bully panuvanga😢
Na earn pana full amt phone call scam
la poiduchu 😢😢#BiggBosstamil #BiggBoss8Tamil #BiggBossTamil8 #Sound #BiggBossTamilSeason8 #Soundarya pic.twitter.com/APsdGQvjci— Troll Bigg Boss Tamil (@Tbbtamil) November 7, 2024