பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 7வது சீசன் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். இறுதி வரை இருந்த அவர் மூன்றாவது ரன்னர் அப் ஆக தேர்வானார்.
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டதே அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய தான் என அவரே ஷோவில் கூறி இருந்தார்.
இருப்பினும் அவரை பிரிந்து சென்ற நடிகை ரச்சிதா மீண்டும் அவருடன் சேர வாய்ப்பு இல்லை என உறுதியாக அறிவித்துவிட்டார்.
புது கார்
இந்நிலையில் தற்போது தினேஷ் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். அவரது பெற்றோர் உடன் சென்று கார் வாங்கி இருக்கும் ஸ்டில்களை தினேஷ் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.
டாடா Harrier Dark Edition காரை தான் தினேஷ் வாங்கி இருக்கிறார். அதன் ஆன் ரோடு விலை சுமார் 26 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.