விஜே அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை விஜே அர்ச்சனா. இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் போட்டியில் Wild Card என்ட்ரியில் வந்த அர்ச்சனாவுக்கு ரசிகர்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் இறுதி வரை சென்று டைட்டில் வென்றார். இதனை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் அருண் என்பவரை அர்ச்சனா காதலித்து வருவதாக வதந்திகள் உலா வந்தது. இதற்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், வேறு எதுவும் இல்லை என தெரிவித்தார்.
புதிய கார்
இந்த நிலையில், நடிகை அர்ச்சனா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பல லட்சம் மதிப்புள்ள இந்த காரை தனது குடும்பத்துடன் இணைந்து வாங்கி, அம்மா, அப்பா மற்றும் சகோதரியுடன் மகிழ்ச்சியாக காரை ஓட்டி சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அர்ச்சனாவிற்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.