பிக் பாஸ்
இன்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 பிரமாண்டமாக ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்று முடிந்தது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர், பொன்னி சீரியல் நடிகை தர்ஷிகா, ரஞ்சித், சீரியல் நடிகர் சத்யா, பவித்ரா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை தர்ஷிகா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதன் காரணத்தினால், அவருக்கு பதிலாக வேறு யார் பொன்னி சீரியலில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.
அவருக்கு பதிலாக இவரா
இந்த நிலையில், தர்ஷிகா ஏற்று நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி வரும் எபிசோடிகளில் அவருக்கு பதிலாக பிரபல நடிகை சஞ்சனா என்பவர் நடிக்கவுள்ளாராம். இவர் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் எனும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.