பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இதுவரை 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால், திடீரென அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் 8-ஐ தொகுத்து வழங்க களமிறனார். போட்டியாளர்களை கையாளும் விதமும், நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்லும் விதமும் விஜய் சேதுபதியிடம் மக்களுக்கு பிடித்துள்ளது.
விஜய் சேதுபதி அதிரடி முடிவு
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர்ஸை மட்டும் தான் சொல்வேன் மற்ற அனைத்து ஸ்பான்சர்ஸ்களையும் சொல்ல மாட்டேன் என்று விஜய் சேதுபதி அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் ஸ்பான்சர்ஸ்களில் ரம்மி சர்க்கிலும் இருப்பதால் தான், அவர் அதை சொல்ல மறுக்கிறார் என்று இதனை காரணமாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய போது இந்த ரம்மி விளம்பர ஸ்பான்சரை கூறியதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.