கமல் ஹாசன் விலகல்
கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமல் ஹாசன். ஆனால், இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.
வருகிற பிக் பாஸ் 8வது சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போவதில்லை என அவரே நேற்று அறிவித்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக வேறு யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றனர்.
விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் வெளியேறியுள்ள நிலையில், விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் “கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்கள் அசாதாரண பங்களிப்பிற்கு ஸ்டார் விஜய்யின் ஒட்டுமொத்த குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த பதிவு..