பிக் பாஸ்
சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகியுள்ளது.
இதில் தற்போது ஹிந்தியில் 18வது சீசன், தமிழ் மற்றும் தெலுங்கில் 8வது சீசன் நடந்து வருகிறது. தமிழில் கமல் ஹாசனுக்கு பதிலாக தற்போது 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இவருடைய தொகுத்து வழங்கும் விதம் மக்கள் உடனடியாக கவர்ந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். மிகவும் எதார்த்தமாக விஷயங்களை கையாண்டு வருகிறார்.
கமல் ஹாசன் விலகியதன் காரணமாகவே விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார். ஆனால், ஒரு முறை கமல் ஹாசன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதே போல் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை முதலில் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், சில எபிசோட்கள் பிறகு நடிகர் சிம்பு தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தார்.
பிக் பாஸ் – நடிகை சமந்தா
தமிழில் எப்படி தற்காலிகமாக கமல் ஹாசனுக்கு பதிலாக வேறொருவர் தொகுத்து வழங்கினார்களோ, அதே போல் தெலுங்கில் நாகர்ஜுனாவிற்கு பதிலாக நடிகை சமந்தா ஒரே ஒரு எபிசோடை தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
What if Sam hosted #BiggBossTamilSeason8 ?#BiggBossTamil #BiggBossTamil8#SamanthaRuthPrabhu
pic.twitter.com/ObJIjIcftI— Sekar 𝕏 (@itzSekar) October 13, 2024