பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார். ஆண்கள் அணி, பெண்கள் அணி என அனைவரையும் வச்சு செய்தார்.
குறிப்பாக ‘சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா’, நீங்கள் அனைவரும் comfort மட்டுமே பார்க்கிறீர்கள், prank விஷயத்தால் ரவீந்தர் முன்பே இது நாமினேஷனுக்காக செய்தேன் என கூறிவிட்டார் என பல விஷயங்கள் குறித்து பேசினார்.
மாட்டிக்கொண்ட சாச்சனா
இந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டை விட்டு வெளியேறி பின், மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சாச்சனா, பெண்கள் அணியில் இருக்கும் 3 வீக் போட்டியாளர்கள் குறித்து ஏன் பெண்களிடம் கூறவில்லை, ரவிந்தரிடம் மட்டும் கூறினார் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி இந்த விஷயம் போட்டுடைத்த நிலையில், பெண்கள் அணியில் உள்ளவர்களிடம் வசமாக சாச்சனா மாட்டிக்கொண்டுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..