Sunday, December 8, 2024
Homeசினிமாபிக் பாஸ் போனது பெரிய தப்பு.. உணர்ச்சிவசமாக பேசிய இயக்குனர் வாசுவின் மகன் சக்தி

பிக் பாஸ் போனது பெரிய தப்பு.. உணர்ச்சிவசமாக பேசிய இயக்குனர் வாசுவின் மகன் சக்தி


நடிகர் சக்தி

மன்னன், சந்திரமுகி போன்ற மாபெரும் வெற்றி பெற்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். இவர் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை படங்களில் நடித்து பிறகு தமிழில் தொட்டால் பூ மலரும், நினைதலே இனிக்கும் போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானார்.

பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு வில்லனாக தோன்ற ஆரம்பித்தார். இதனால் சில ஆண்டுகள் வெளியே வராமல் இருந்தார்.

சக்தி கூறிய காரணம்

இந்த நிலையில், தனது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை குறித்து பேட்டி ஒன்றில் சக்தி பகிர்ந்துள்ளார். அதில், “நான் என் சிறு வயதிலிருந்தே தோல்வி அடைந்தது இல்லை, எதிலுமே நான் ஃபெயில் ஆனது கிடையாது. அவ்வாறு தான் நன்றாக எம்பிஏ வரை படித்தேன். ஆனால், இந்த சினிமா துறைக்கு வந்த பிறகு பல தோல்விகளை கண்டேன்”.

மேலும் “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என் அப்பா அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான் அதை கேட்காமல் பிடிவாதமாக சென்றேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின் சில பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்”.

பிக் பாஸ் போனது பெரிய தப்பு.. உணர்ச்சிவசமாக பேசிய இயக்குனர் வாசுவின் மகன் சக்தி | Going Biggboss Was Biggest Mistake Says Sakthi

“அப்போது நடிகர் ரஜினி என் அப்பாவிற்கு போன் செய்து என்னை பற்றி விசாரித்தார். என்னிடம் மீண்டும் சினிமாவிற்கு வரும் படி கேட்டு கொண்டார்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments