பிக் பாஸ்
பிக் பாஸ் 8 கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சாச்சனா வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார்.
இவருடைய எலிமினேஷன் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது நியமற்ற எவிக்ஷன் என ரசிகர்களும் கூறினார்கள். இந்த நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் வெளியேறப்போவது யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
4வது நாள் முதல் ப்ரோமோ
இதுகுறித்து 4வது நாளான இன்று முதல் ப்ரோமோவில் இந்த வாரத்தின் இறுதியில் பிக் பாஸிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேசியுள்ளனர். அதில் ஒவ்வொரும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.
ரவீந்தர், சௌந்தர்யா, ரஞ்சித், முத்துக்குமரன், ஜாக்லின் மற்றும் அருண் ஆகியோர் இதில் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து யார் வெளியேறுவார் என ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில் பேசியுள்ளார். அதுகுறித்து வெளிவந்துள்ள ப்ரோமோ இதோ..