பிக் பாஸ் 8
18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கியது. இதில் முதல் வாரத்தில் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் இறுதியில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இதுவரை வெளியேறிய இருவரும் ஆண்கள் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் சென்ற நிலையில், தற்போது பெண்கள் அணி வலுவாக இருக்க, ஆண்கள் அணியில் ஒவ்வொருவராக குறைந்து வருகிறார்கள்.
வெளியேறப்போகும் போட்டியாளர்
இந்நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.
இதில் பெண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்ற நிலையில், இதிலிருந்து பவித்ராவை காப்பாற்றிவிட்டார். இந்த நிலையில், நாமினேட் ஆகியுள்ள 7 போட்டியாளர்களில் ஜாக்குலின், அன்ஷிதா அல்லது தர்ஷா குப்தா இந்த மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.