விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் புகழ் பெற்ற நடிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென சினிமாவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
நடிப்பது மட்டுமில்லாமல் தற்போது, இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் சேதுபதி மகன்
18 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் பிரமாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யா ‘பீனிக்ஸ்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்த படம் ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளிவர உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.